கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2021-06-05 20:19 GMT
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,513 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 10,220 பேர் வீடு திரும்பியுள்ளனர். 2,150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,081 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்