துப்பட்டா சக்கரத்தில் சிக்கியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் சாவு

ஆலங்குளம் அருகே துப்பட்டா சக்கரத்தில் சிக்கியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-06-05 20:01 GMT
ஆலங்குளம்:
சேரன்மாதேவி அருகே பந்தல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வேல்மாரி (26). இவருடைய தங்கைக்கு குழந்தை பிறந்ததால், அவர்களை பார்ப்பதற்காக வேல்மாரி தனது பெற்றோரின் ஊரான தெற்கு கிடாரகுளத்துக்கு சென்றார். பின்னர் இரவில் வேல்மாரி அங்கிருந்து தனது தங்கை கணவருடன் மோட்டார் சைக்கிளில் பந்தல்மேடு கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆலங்குளம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேல்மாரியின் துப்பட்டா மோட்டார் சைக்கிளின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேல்மாரி பலத்த காயமடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்