முந்திரி பழத்தில் மது தயாரித்தவர் கைது
உவரியில் முந்திரி பழத்தில் மது தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உவரி கடற்கரை காட்டுப்பகுதியில் முந்திரி பழத்துடன் ஈஸ்ட் கலந்து மது தயாரித்ததாக, உவரியை சேர்ந்த செல்வம் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 லிட்டர் மது ஊறலை கைப்பற்றி அழித்தனர்.