ஊரடங்கை மீறிய 222 பேர் மீது போலீசார் வழக்கு
ஊரடங்கை மீறிய 222 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர்
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று கரூர் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாத 134 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக மொத்தம் ரூ.26 ஆயிரத்து 800, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் 9 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.4 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது.
7 பேர் கைது
மேலும், ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 74 வழக்குகள் பதிந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது விற்றதாக 5 வழக்குகள் பதிந்து 7 பேர் கைது செய்யப்பட்டு, 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாராயம் 4 லிட்டரும், சாராய ஊறல் 600 லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நொய்யல்-குளித்தலை
இதேபோல் வேலாயுதம்பாளையம் பகுதியில் 30 பேரும், குளித்தலை பகுதியில் 6 பேரும் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித்திரிந்ததாக மொத்தம் 36 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 222 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.