கனமழை எதிரொலி: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கனமழை எதிரொலியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2021-06-05 17:33 GMT
ஓசூர்:
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 40.34 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்