தரிசு நிலத்தில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை அருகே பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தரிசு நிலத்தில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தரிசு நிலத்தில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 1½ லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக கடந்த ஆண்டுகளில் விவசாயம் பாதிப்புக்கு உள்ளானது. இதில் 2020-2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடி தொடங்க முடியாமல் பணப்பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தரங்கம்பாடி தாலுகா சேத்தூர் கிராமத்தில் விவசாயிகள் தரிசு நிலத்தில் கருப்பு கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.