களம்பூர் அருகே மத்திய அரசின் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
களம்பூர் அருகே மத்திய அரசின் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
ஆரணி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் களம்பூர் அடுத்த முக்குரும்பை, வடமாதிமங்கலம், கூடலூர், புலவன்பாடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள தபால் நிலையம் முன்பாக மத்திய வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.நாராயணசாமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் விவசாயிகள் சின்னகுட்டி, எம்.சேகர், எஸ்.ராஜாராம், சி.ஏழுமலை, பஞ்சாட்சரம், சுப்பிரமணியம், ஏழுமலை, நேரு, கணேசன், வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் வேளாண் சட்ட நகலை எரித்துபோரட்டத்தில் ஈடுபட்டனர்.