ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எச்சரிக்கை

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணைய‌ர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

Update: 2021-06-05 14:44 GMT
திருக்கனூர், 

கொரோனா எனும் உயிர்க்கொல்லி நோயில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். இதற்காக பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து வீட்டில் இருக்க வேண்டும்.

மிகவும் அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே முகக்கவசம் அணிந்து வெளியே வரவும். சமூக இடைவெளி, சானிடைசர் அல்லது சோப் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். தேவையின்றி வெளியில் சுற்றினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்க வேண்டும்.

கொரோனா அறிகுறியுடன் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். தொண்டை வலி, இருமல், உடல்வலி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும். இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்