காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு
காஞ்சீபுரம் சரகத்திற்கு புதிய டி.ஐ.ஜி.யாக சத்யபிரியா நேற்று காஞ்சீபுரம் டி.ஐ.ஜி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.
இவர் காவல்துறை பயிற்சி கல்லூரியின் டி.ஐ.ஜி பொறுப்பில் இருந்து தற்போது காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். காஞ்சீபுரம் சரக புதிய டி.ஐ.ஜி. சத்யபிரியாவை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு வகித்து வந்த சாமுண்டீஸ்வரி தற்போது பதவி உயர்வு பெற்று சென்னை காவல் துறை
தலைமையகத்திற்கு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.