திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 21 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 21 பேர் பலியாகினர்.

Update: 2021-06-04 21:19 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் பலர் கொரோனாவால் இறக்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் வரை 428 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகினர். 

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதில் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இறந்தவர்களில் 50 வயதுக்குள் ஒருவரும், 50 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் 7 பேரும், 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் 6 பேரும், 70 வயதுக்கு மேல் 7 பேரும் இடம்பெற்றுள்ளனர். 

இவர்களில் 16 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் பழனி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் இறந்தனர். 

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 449 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று 47 பெண்கள் உள்பட 308 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 28 ஆயிரத்து 256 ஆக அதிகரித்தது. 

அதேநேரம் 514 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 25 ஆயிரத்து 71 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 736 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்