ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 156 பேருக்கு கொரோனா பரிசோதனை
பாவூர்சத்திரத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 156 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி அந்த வழியாக வந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் முக கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகனங்களில் வந்த 156 பேருக்கு பாவூர்சத்திரம் பஸ்நிலையம் வெளிப்புறத்தில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அத்துடன் முக கவசம் அணியாமல் வந்த 2 பேருக்கு சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன் தலா ரூ.200 அபராதம் விதித்தார்.