பொள்ளாச்சியில் கடந்த 3 மாதத்தில் 8510 பேருக்கு கொரோனா பாதிப்பு
பொள்ளாச்சியில் கடந்த 3 மாதத்தில் கொரோனா பாதிப்பு 8,510-ஆக அதிகரித்து உள்ளது. 3,676 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கடந்த 3 மாதத்தில் கொரோனா பாதிப்பு 8,510-ஆக அதிகரித்து உள்ளது. 3,676 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் உள்ளது.
தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பாதிப்பு அதிகமாக ஏற்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
நகர்புறங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் மட்டும் 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
3,676 பேர் குணம்
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகா பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தான் இதுவரை 2,066 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக வடக்கு ஒன்றியத்தில் 1,682 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
வருவாய் கோட்டத்தில் இதுவரை 8,510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 3,676 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இன்னும் 4,834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று பாதித்த 476 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.