மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2021-06-04 18:22 GMT
காரைக்குடி,ஜூன்
காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் கடைகளுக்கு பிரட் வினியோகிக்கும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் பிள்ளையார்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே மதியம் சாப்பிட்டு விட்டு அருகிலுள்ள அதிகம் பயன்பாட்டில் இல்லாத வீட்டிற்கு படுக்க சென்றுள்ளார். அங்குள்ள மின் விசிறிக்கான ஸ்விட்ச் போடும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் மயக்க நிலையை அடைந்தார். மணிகண்டனின் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் ஓடி வந்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்