தர்மபுரி மாவட்டத்தில் 318 பேருக்கு கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் 318 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 318 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,916 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 363 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 318 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் 2,871 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 136பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.