ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்திய நீச்சல் வீரர்

ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2021-06-04 12:29 GMT
புதுச்சேரி, 

ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக இருந்த சைக்கிள், இன்று பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் மற்றும் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது.

இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த் கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டினார். இதற்காக பழைய மாமல்லபுரம் காரப்பாக்கம் கடல் பகுதியில் ஆழ்கடலிலில் சைக்கிள் ஓட்டி அசத்தினார்.

தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிதிவண்டி தினத்தில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே இவர், ஆழ்கடலில் சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஆழ்கடலில் மீன்களுடன் பழகி நீச்சல் அடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்