மராட்டியத்தில் புதிய கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை: அரசு திட்டம்

புதிய கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரி, தனிமை மையங்களில் தனிமைப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

Update: 2021-06-04 10:54 GMT
புதிய கொரோனா நோயாளிகள்
மராட்டியத்தில் கொரோனா நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் தொற்று நோயை மேலும் கட்டுக்குள் கொண்டுவர அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக புதிதாக கொரோனா பாதிக்கும் நோயாளிகளை ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா தனிமை மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை சேவை இயக்குனர் டாக்டர் அர்ச்சனா பாட்டீல் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

நோய் பரவலை தடுக்க...
கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை வீட்டில் தனிமை படுத்துவதால் அவர்களின் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது.எனவே இந்த பிரச்சினையை சரிசெய்யவே தனிமை மையத்தில் அவர்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் தனிமைப்படுத்துதல் மையத்தில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை 
அதிகரிக்குமாறு அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்காக தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள எந்த நோயாளிகளும் தனிமை மையத்திற்கு மாற்றப்பட மாட்டார்கள். புதிதாக கொரோனா பாதிப்பு  கண்டறியப்படுபவர்களை தனிமை மையத்திற்கு மாற்றவே திட்டம் வகுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்