இரும்பாலை கொரோனா மையத்தில் பெண் போலீசாருக்கு பணி ஒதுக்க கூடாது- கமிஷனர் உத்தரவு

இரும்பாலை கொரோனா மையத்தில் பெண் போலீசாருக்கு பணி ஒதுக்க கூடாது என்று மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-06-03 22:59 GMT
சேலம்:
சேலம் அருகே உள்ள இரும்பாலை வளாகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையத்தின் பாதுகாப்பிற்காக போலீசார் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் இரும்பாலை மையத்தில் ஆய்வு நடத்தினார். பின்னர் அந்த பகுதியில் பாதுகாப்பு கருதி இனி இரும்பாலையில் அமைக்கப்பட்டு உள்ள மையத்தில் பெண் போலீசாருக்கு பணி ஒதுக்கக் கூடாது என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்