வேப்பனப்பள்ளி அருகே மது கடத்தி வந்த 6 பேர் பிடிபட்டனர்

வேப்பனப்பள்ளி அருகே மது கடத்தி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-03 22:57 GMT
வேப்பனப்பள்ளி,

வேப்பனப்பள்ளி அருகே தமிழக எல்லையில் வேப்பனப்பள்ளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமைமையிலான போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கர்நாடக மாநில மதுபாட்டில்களை இருசக்கர வாகனங்களில் கடத்திய எலுமிச்சனஅள்ளியை சேர்ந்த சுப்பிமணி (வயது 45), சென்னசந்திரம் வேணு (28), காவேரிப்பட்டணம் சிவலிங்கம் (45), எம்.சி.பள்ளி வெங்கடேசன் (27), தளிப்பள்ளி நாரயணன் (45), எம்.சி. பள்ளி சுரேஷ் (35) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

 அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்