விவசாய பாசனத்திற்காக பாளையங்கால்வாயில் தண்ணீர் திறப்பு
விவசாய பாசனத்திற்காக மேலச்செவல் பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
பேட்டை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விவசாய பாசனத்திற்காக மேலச்செவல் பாளையங்கால்வாயில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். நிகழ்ச்சியில் முன்னாள் சங்கர்நகர் பஞ்சாயத்து தலைவர் பேச்சி பாண்டியன், வல்லநாடு முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.