15 வாகனங்கள் பறிமுதல், அபராதம்

ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களின் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-03 20:43 GMT
பேரையூர், 
பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முக கவசம் அணியாமல் வெளியே நடமாடிய 70 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 34 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றித் திரிந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்