விபத்தில் பெற்றோரை இழந்த 3 பெண் குழந்தைகளுக்கு பல்வேறு அமைப்பினர் உதவி
விபத்தில் பெற்றோரை இழந்த 3 பெண் குழந்தைகளுக்கு பல்வேறு அமைப்பினர் உதவி வருகின்றனர்
அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வாதிரிப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சுவேதா(15), மதுமிதா (14), அபிதா (9) ஆகிய 3 மகள்கள். இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிசாமியும், மல்லிகாவும் கார் மோதி இறந்தனர். இதனால் பெண் குழந்தைகள் 3 பேரும் நிர்கதியானார்கள். இதுகுறித்து தினத்தந்தியில் குழந்தைகளின் படத்துடன் செய்தி பிரசுரமாகி இருந்தது.
இந்த செய்தியை பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அந்த பெண் குழந்தைகளுக்கு பணம், பொருள் போன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.ஒன்றிய கவுன்சிலர் சி.கே.எம்.ரவி கூறுகையில், விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.