மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-06-03 20:20 GMT
திருமங்கலம், 
பேரையூர் அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது 31). ராமநாதபுரம் அருகேயுள்ள சங்க ரலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (35). இவர்கள் திருமங்கலம் ெரயில்வே நிலையம் அருகே மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மதுவிலக்கு போலீ சார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்