திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.

Update: 2021-06-03 18:34 GMT
திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.

நெல் கொள்முதல் நிலையம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா குண்டூர், பெரிய சூரியூர் மற்றும் நவலூர் குட்டப்பட்டு, மணிகண்டம், பூங்குடி, மரவனூர், பி.மேட்டூர், ஆலத்துடையான்பட்டி, வைரி செட்டிபாளையம் ஆகிய 9 இடங்களில் விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்வதற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் பெரிய சூரியூரில் அமைக்கப்பட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணிகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசு, திருவெறும்பூர் தாசில்தார் செல்வ கணேஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தூர்வாரும் பணி

மேலும் கும்பக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம் குடியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பெரிய குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார். மேலும் பழங்கனாகுடி பெரிய குளத்திற்கு தண்ணீர் வரும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் தூர்வாரும் பணியை அவர் ஆய்வு செய்தார். 


இதுபோல் உப்பிலியபுரம் அருகே பி.மேட்டூரில் நெல் கொள்முதல் மையத்தை ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அரசு நெல்கொள்முதல் மைய தரக்கட்டுப்பாடு அலுவலர் அன்புராஜா, சூப்பிரண்டு இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்