முன்கள பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள்
முன்கள பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
கரூர்
கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டேங் ஆபரேட்டர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, முட்டை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தாந்தோணி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் கலந்து கொண்டு முன்களபணியாளர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். இதில், ஊராட்சி செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.