மயிலாடுதுறை மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி

தமிழக அரசின் வனத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்

Update: 2021-06-03 17:59 GMT
மயிலாடுதுறை:
தமிழக அரசின் வனத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
பசுமை தமிழகம் திட்டப்பணி 
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் வனத்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி பசுமை தமிழகம் திட்டப்பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வன விரிவாக்க அலுவலர் சேகர் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை கலெக்டர் லலிதா, மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். 
1000 மரக்கன்றுகள்
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம் மட்டுமல்லாமல், பூம்புகார், செம்பனார்கோவில், திருவெண்காடு பெருந்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் 1000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, நகராட்சி ஆணையர் சுப்பையா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வனத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்