பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது

Update: 2021-06-03 17:32 GMT
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அம்மாபாளையம் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த குப்பன் (வயது 60) என்பவர் வாணி ஆற்றின் கரையோரம் உள்ள பச்சையம்மன் கோவில் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குப்பன்னிடம் இருந்த 30 மதபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
=====

மேலும் செய்திகள்