கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Update: 2021-06-03 17:22 GMT
கோவை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருக்கும் ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி கோவையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எம்.ஐ.அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார். 

தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.இஸ்மாயில், மாநில பொருளாளர் டி.எம்.இப்ராகிம் பாதுஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

மேலும் கொரோனா விதி முறைகளை கடைப்பிடித்து கோவையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு சார்பில் 300-க்கும் மேற்பட்ட இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மண்டல தலைவர் அன்வர் உசேன், மாவட்ட செயலாளர்கள் அப்துர் ரகுமான், முஜிபுர் ரகுமான் மற்றும் பீர் முகமது உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Article-Inline-AD

மேலும் செய்திகள்