கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் விவரத்தை தெரிவிக்கலாம் கலெக்டர் கிரண்குராலா தகவல்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் விவரத்தை தெரிவிக்கலாம் கலெக்டர் கிரண்குராலா தகவல்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், எண்-156, சாரதாம்மாள்தெரு, நித்தியானத்தா நகர், வழுதரெட்டி, விழுப்புரம்- 605401, என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04146-290659 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்.
இது தவிர 1098 என்ற குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் மற்றும் 04146-290674 என்ற குழந்தைகள் நலக்குழுமத்தின் தொலைபேசி எண் ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.