தண்டுபத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

தண்டுபத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2021-06-03 16:47 GMT
குலசேகரன்பட்டினம்:
தண்டுபத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி பிறந்த நாள் விழா
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, உடன்குடி அருகே தண்டுபத்தில் உள்ள தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து உடன்குடி வட்டாரத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் மருத்துவ பணியாளர்கள் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உடன்குடி வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர்,  மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, இளங்கோ, மாவட்ட நெசவாளர்அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, துணை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், திருச்செந்தூர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்கள பணியாளர்களுக்கு உணவு
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு காயல்பட்டினம் நகரசபையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள், தற்காலிக சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகிய முன்கள பணியாளர்களுக்கு பிரியாணி உணவு வழங்கும் நிகழ்ச்சி நகரசபை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
நகரசபை ஆணையாளர் சுகந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகரசபை பொறியாளர் ஹரிஹரன், நகரசபை சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், ஓவர்சியர் சுதாகர், காயல்பட்டினம் நகர தி.மு.க.செயலாளர் முத்து முகமது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் காதர்,காயல்பட்டினம் நகர  துணை செயலாளர்கள் கதிரவன், லேன்ட் மம்மி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட  வர்த்தக பிரிவு துணை அமைப்பாளர்ஓடை எஸ்பி ஆர் சுகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்