மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி
சிவகாசி அருகே மின்னல் தாக்கி 2 மாடுகள் பலியானது.
சிவகாசி,ஜூன்
சிவகாசி அருகே உள்ள துரைச்சாமிபுரம் அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருக்கு சொந்தமான 10 மாடுகள் நேற்று மாலை வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது லேசான சாரல் மழையுடன் இடி- மின்னல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் திடீரென மின்னல் தாக்கியதில் 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனது. இந்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடுகளின் உரிமையாளருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.