ஆரணியில விதியை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு ‘சீல்’
ஆரணியில விதியை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு ‘சீல்’
ஆரணி
ஆரணியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதிகாரிகள் சில தளர்வுகளுடன் ஓட்டல்கள், பால், பேக்கரி, மருந்துக்கடைகள் ஆகியவை மட்டும் செயல்பட அனுமதித்துள்ளனர். ஆனால் ஆரணியில் முழு ஊரடங்கு விதியை மீறி நள்ளிரவில் மண்டி வீதியில் பல மளிகைக் கடைகளை திறந்து வியாபாரிகள் வியாபாரம் செய்வதாக அரசு அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தது.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுரேஷ் பாண்டியன், டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல், நகர கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மண்டி வீதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது முழு ஊரடங்கு விதியை மீறி 3 மளிகைக் கடைகள், ஒரு சமையல் எண்ணெய் கடை மற்றும் இதர 2 கடைகள் என மொத்தம் 6 கடைகள் திறக்கப்பட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மேற்கண்ட அதிகாரிகள் 6 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.