7 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளானார்கள்; கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை அதிவேகமாக உயரவில்லை: மந்திரி ராஜேஷ் தோபே தகவல்

கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. மராட்டியத்தில் ஏராளமான உயிர்களை காவு வாங்கிய இந்த நோயின் பாதிப்பு சமீப நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.

Update: 2021-06-03 09:40 GMT
கொரோனா 2-வது அலை குறைந்து வரும் நிலையில், 3-வது அலை ஏற்பட்டதால் அது குழந்தைகளை அதிகமான பாதிப்புக்கு உள்ளாக்கும் என வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். எனவே குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் குழந்தைகள் 7 சதவீதம் பேர் மட்டுமே தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மிகப்பெரியதாக தெரிகிறது. அடுத்த அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் கூறி உள்ளதால் இதை தடுக்கவும், கண்காணிக்கவும் மாநில அரசு குழுவை நியமித்துள்ளது. இதற்காக முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் குறித்து நடத்திய ஆய்வில் தொற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிவேக உயர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்