ஏற்காடு மலைப்பாதையில் காயம் அடைந்து அவதிப்படும் காட்டெருமை
ஏற்காடு மலைப்பாதையில் காயம் அடைந்து அவதிப்படும் காட்டெருமை
ஏற்காடு:
முழு ஊரடங்கு காரணத்தால் சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்காடு மலை அடிவாரத்தில் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் மலைப்பாதையில் ஒரு சில வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களும் செல்வது இல்லை. பஸ்கள் ஓடாததாலும் மலைப்பாதை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மலைப்பாதையில் தற்போது காட்டெருமைகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
இந்தநிலையில் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே காட்டெருமை ஒன்று அடிபட்டு காயத்துடன் கடந்த 3 நாட்களாக நகர முடியாமல் ஒரே இடத்தில் படுத்து கிடக்கிறது. காயம் அடைந்து அவதிப்படும் காட்டெருமைக்கு சிகிச்சை அளித்து காட்டுக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.