பொதுமக்களுக்கு இலவச காய்கறிகள்

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இலவச காய்கறிகள் வழங்கப்பட்டது.

Update: 2021-06-02 21:47 GMT
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் நகர அ.தி.மு.க. மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் 9 மற்றும் 10 வார்டுகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக காய்கறிகள் அடங்கிய பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி, வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்கறி பைகளை வழங்கினார். சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அனைவருக்கும் இலவசமாக முககவசங்கள் வழங்கப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்