கீழக்கரை பகுதியில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகரிப்பு

கீழக்கரை பகுதியில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகரிப்பு

Update: 2021-06-02 19:54 GMT
கீழக்கரை
கீழக்கரையில் கொரோனா 2-ம் அலையில் இதுவரையிலும் 164 பேர் தொற்று பாதிக்கப்பட்டு 124 பேர் சிகிச்சை முடிந்த நிலையில் 30 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் கீழக்கரையில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் இதுவரையிலும் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். இதைபொருட்படுத்தாமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டி தெருவில் சுற்றித்திரிகின்றனர். போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தும் வெளியில் சுற்றுவதற்கு ஏதாவது ஒரு காரணத்தை கூறி செல்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. மேலும் சுகாதாரத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி மருந்து தெளித்து தீவிர தடுப்பு  நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்