மேலும் 17500 தடுப்பூசிகள் வந்தன

மதுரைக்கு மேலும் 17500 தடுப்பூசிகள் வந்தன

Update: 2021-06-02 19:42 GMT
மதுரை, ஜூன்.3-
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து நேற்று மதியம் கொரோனா தடுப்பூசிகள் மதுரைக்கு கொண்டுவரப்பட்டன. மதுரை மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் வழங்கும் வகையில் மதுரைக்கு தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தடுப்பூசி கிடங்கில் வைக்கப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்திற்கு 15 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 2500 கோவாக்சின் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாவது தவணை செலுத்த காத்திருக்கும் நபர்களுக்கும் செலுத்தப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பிட்ட சில ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இன்று காலை இந்த தடுப்பூசிகளை பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்