ரெயிலில் 175 மதுபாட்டில்களை கடத்தி வந்தவர் கைது

கர்நாடகாவில் இருந்து ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபர் சிக்கினார்.

Update: 2021-06-02 19:29 GMT
சோழவந்தான்,ஜூன்
கர்நாடகாவில் இருந்து ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபர் சிக்கினார்.
ரோந்துப்பணி
சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா தலைமையிலான போலீசார் நேற்று காலை சோழவந்தான் ெரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மைசூருவில் இருந்து தூத்துக்குடி செல்லும் ெரயிலில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினார். 
அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சோதனை நடத்தினர். இதில் அந்த நபர் கர்நாடகாவில் இருந்து 175 மதுபாட்டில்களை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. 
கைது
தற்போது ஊரடங்கால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்ய கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 
விசாரணையில் அவரது பெயர் நடுமுதலைக்குளம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் கருப்புசாமி (வயது 30) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்