ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை
ஸ்ரீவில்லிபுத்தூரில் 1 மணி ேநரம் பலத்த மழை பெய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்நிலவியது.