காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை; வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-06-02 18:10 GMT
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலத்தில் கொேரானா ைவரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு ஓரிடத்தில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வேளாண் விற்பனை வரித்துறை சார்பில் 63 வாகனங்கள் உள்பட வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 362 வாகனங்களுக்கு வீடுகளை தேடி சென்று காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 200 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. 
நடமாடும் காய்கறி வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் காய்கறிகள் விற்கப்படுகிறதா? என்று வேளாண் விற்பனை வணிகததுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
அப்போது நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியல் காய்கறி வாகனங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும். காய்கறிகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மற்றும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின் போது உதவி வேளாண் அலுவலர்கள் செல்வம், பெரியசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்