புதுக்கோட்டை, ஜூன்.3-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி உள்ளது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து448 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைக்கு பின் ஒரே நாளில் 516 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து790 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 3 ஆயிரத்து448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு நேற்று மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.