ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆய்வு

ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆய்வு.

Update: 2021-06-02 17:42 GMT
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் ஒன்றியம் ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியகட்டிடம், சுற்றுச்சுவர், அமைத்து தர வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சி தலைவர் உறுதியளித்தார்.

அப்போது மாவட்ட ஊராட்சி செயலர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், வெற்றியழகன், வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி, மருத்துவர்கள் ஜெசிமா, உதயா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணிசுந்தர், ஒன்றியகுக்ழு உறுப்பினர் அனிதாமாதவன், ஊராட்சி தலைவர் பாஸ்கரன் ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்