சிறுமி 5 மாத கர்ப்பம்;போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

காரைக்குடியில் சிறுமியை 5 மாத கர்ப்பிணியாக்கிய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

Update: 2021-06-02 16:55 GMT
காரைக்குடி,

காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இவள் தனது தோழியைப் பார்க்க அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம். அப்போது தோழியின் அண்ணன் இந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதன் காரணமாக அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியானாள். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்