தெள்ளார் அருகே விவசாய நிலத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்

தெள்ளார் அருகே விவசாய நிலத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-02 16:46 GMT
வந்தவாசி

மது பாட்டில்கள் பறிமுதல்

வந்தவாசியை அடுத்த தெள்ளார் அருகே உள்ள  இரும்புலி கிராமத்தில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி தெள்ளார் இன்ஸ்பெக்டர் சோனியா தலைமையில் போலீசார் விரைந்து சென்று  ஏழுமலை என்பவருடைய விவசாய நிலத்தில் உள்ள பம்புசெட்டில் சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு 20 லிட்டர் கேன்களில் இருந்து பாட்டில்களில் மதுவை நிரப்பிக் கொண்டிருந்தனர். அருகில் மூடிகள், ஸ்டிக்கர்கள் ஆகியவை இருந்தன. அவற்றையும், 130 குவாட்டர் பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
4 பேர் கைது

மேலும் அங்கிருந்த் திண்டிவனம் தாலுகா எண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுரங்கம் மகன் சங்கர் (வயது 34), இரும்புலி கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் ஏழுமலை (35), ஏழுமலை மகன் சிலம்பரசன் (28), பூங்காவனம் மகன் இளவரசன் (26) ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய திண்டிவனம் தாலுகா  கருவிளம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணவாளன் (50) என்பவரை வலைவீசி தேடிவருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட மதுவின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்