தேனி மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
தேனி மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தினசரி பாதிப்பு 800-க்கு மேல் இருந்த நிலையில், சில நாட்களாக தாக்கம் குறைந்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 369 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 510 பேர் நேற்று குணமாகினர். 5 ஆயிரத்து 536 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த 55 வயது பெண், 65 வயது முதியவர் ஆகிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.