கொரோனா பாதித்தவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் பெண் டாக்டர்

மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. உயிரிழப்பில் ஏற்ற-இறக்கமாக உள்ளது.

Update: 2021-06-02 16:07 GMT
கர்நாடகம்,

கர்நாடகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. உயிரிழப்பில் ஏற்ற-இறக்கமாக உள்ளது. மேலும் கொரோனா பாதித்து 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி யோகா, உடற்பயிற்சி போன்றவை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஜவகன்டனஹள்ளி கிராமத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு நோயாளிகளுக்கு டாக்டர் சுருதி சிகிச்சை அளித்து வருகிறார். இந்த நிலையில் அவர், கடந்த 10 நாட்களாக கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகிறார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறார். அத்துடன் கொரோனா சிகிச்சை மையத்தில் நடனமும் ஆடி வருகிறார். அவர், கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி, உடற்பயிற்சி கற்று கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டாக்டர் சுருதியின் செயலுக்கு பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்