திருவண்ணாமலையில் ஆட்டோ மோதி மின்வாரிய ஊழியர் பலி

திருவண்ணாமலையில் ஆட்டோ மோதி மின்வாரிய ஊழியர் பலி

Update: 2021-06-02 16:01 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையை அடுத்த துர்க்கை நம்மியந்தல் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 41). இவர் வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணி செய்து வந்தார். நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் தீபம்நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அங்குள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகத்தின் உடலை  பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்