மளிகை, ரூ.2 ஆயிரம் வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
மளிகை, ரூ.2 ஆயிரம் வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
கோவை
பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்க ளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகி றது.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ரேஷன் கடைகளில் மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கப்படும். அதில் குறிப்பிட்டு உள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்.
இதன் மூலம் கொரோனா பரவல் சங்கிலி உடைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 30 ஆயிரம் ரேஷன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 1,419 கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் அவர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
ரேஷன் கடை ஊழியர்கள் கைகளில் உறை, முகக்கவசம் அணிந்து கொண்டு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கினர். அதை பயன்படுத்தி தமிழக அரசு வழங்க உள்ள மளிகை பொருட்கள் மற்றும் 2-ம் கட்டமாக ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில், கோவை வைசியாள் வீதியில் பொதுமக்கள் டோக்கன் வாங்க திரண்டனர்.
ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக டோக்கன் வழங்கி வரும் நிலையில் பொதுமக்கள் வைசியாள் திரண்டது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று டோக்கன் பெற்றுச்செல்ல அறிவுறுத்தினர்.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது
ரேஷன் கடையில் வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் மட்டு மின்றி தமிழக அரசு அறிவித்துள்ள மளிகை பொருட்கள் மற்றும் 2-ம் கட்ட நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் தேதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட்ட டோக்கன் வழங்கப்படும். இன்று (நேற்று) முதல் நாளில் சுமார் 2.5 லட்சம் பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.