ஏழைகளுக்கு நிவாரண உதவி
தென்திருப்பேரையில் ஏழை குடும்பங்களுக்கு போலீசார் நிவாரண உதவி வழங்கினர்.
தென்திருப்பேரை, ஜூன்:
தென்திருப்பேரையில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை, எளிய 30 குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் காய்கறி, பழங்கள் அடங்கிய பொருட்களை ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையம் சார்பில் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, தென்திருப்பேரை புறக்காவல் நிலையத்தில் வைத்து வழங்கினார். நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.