ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொரோனாவுக்கு பலி

ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொரோனாவுக்கு பலி

Update: 2021-06-02 12:31 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் அரசு மருத்துவனையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் பாரூக்பாஷா (வயது 55). இவர் கடந்த 10 நாட்களாக கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாணியம்பாடி அருகே நர்ஸ் ஒருவர் கடந்த வாரம் பலியான நிலையில், நேற்று சுகாதார மேற்பார்வையாளர் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சுகாதார வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்