பெருந்துறையில் லாரி மோதியதில் சேதமடைந்த ரவுண்டானா சுவர்

பெருந்துறையில் லாரி மோதியதில் ரவுண்டானா சுவர் சேதமடைந்தது.

Update: 2021-06-01 21:26 GMT
பெருந்துறை

பெருந்துறையில் தினசரி மார்க்கெட் அருகே ஈரோடு ரோடு, பவானி ரோடு, சென்னிமலை ரோடு, கோவை ரோடு ஆகிய நான்கு ரோடுகள் சந்திக்கும் ரவுண்டானா உள்ளது. இந்த சந்திப்பில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் கல்வி நிறுவனம் சார்பில் ரவுண்டானா கட்டப்பட்டது. முக்கிய சந்திப்பான இந்த ரவுண்டானா வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு நேரத்தில் ரவுண்டானாவை சுற்றி சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அதில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ரவுண்டானாவின் சுற்றுச்சுவர் லேசான விரிசலுடன் சேதம் அடைந்து காணப்பட்து.  

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவுண்டானா வழியாக சென்ற லாரி ஒன்று அதன் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதன்காரணமாக அந்த சுவரின் மேல் பகுதி முற்றிலுமாக இடிந்து விட்டது.

சேதமடைந்த ரவுண்டானா சுவரை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்